முனிவர்களுக்கு காட்சி அளித்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர்

பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார்.
முனிவர்களுக்கு காட்சி அளித்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர்
Published on

இரணிய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று முனிவர்கள் வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார்.

அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் 8 இடங்களில் உள்ளன. அதில் ஒன்றே இத்திருத்தலம். அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் மகாலட்சுமியை வேண்டினார்கள்.

நரசிம்மரின் கோபத்தை தனிக்க எண்ணிய லட்சுமி அம்மையார், நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்து, சாந்தரூபியாக காட்சியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com