ஆத்துமரத்துப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா

விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆத்துமரத்துப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஆத்துமரத்துப்பட்டியில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. விழாவில் முளைப்பாரி, பால்குடம் மற்றும் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து கரகம் அம்மன் குளத்திற்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று அம்மன் மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com