பூப்பறிக்க சென்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு

சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

தவளகுப்பம் முத்து முதலியார் நகரில் தனியார் அப்பார்ட் மெண்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தவர் கிருஷ்ண மூர்த்தி வயது 57) இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

கிருஷ்ண மூர்த்திக்கு சொந்தமாக அபிஷேக பாக்கத்தில் நிலம் மற்றும் வீடு உள்ளது.தினமும் காலை கிருஷ்ண மூர்த்தி நிலத்தை பார்வையிட்டு விட்டு பழைய வீட்டு தோட்டத்தில் பூக்களை பறித்து வருவது வழக்கம். அதுபோல் கிருஷ்ண மூர்த்தி பழைய வீட்டுக்கு பூப்பறிக்க சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ண மூர்த்தியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ண மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அவரது மகன் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com