இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா R1 ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதியரக அலுமினியம் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்ட யமஹா R1 முற்றிலும் புதிய 998சிசி லிக்விட் கூல்டு 4 சிலிண்டர் இன்ஜின், புதிய 6-ஸ்பீடு ஸ்லிப்பர் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
இந்த இன்ஜின் 200 பி.எஸ். @13,500 ஆர்.பி.எம் மற்றும் 112.4 என்.எம். டார்கியூ @11,500 ஆர்.பி.எம் செயல்திறன் கொண்டுள்ளது. YZF-R1
மாடல் 998சிசி, கிராஸ் பேண், 4-வால்வ் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 200 எச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இத்துடன் முந்தைய R1 மாடலை விட புதிய மாடலில் குவிக் ஷிஃப்ட் சிஸ்டம் மற்றும் லிஃப்ட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
2055 மில்லிமீட்டர் நீளமும், 690 மில்லிமீட்டர் அகலம், 1150 மில்லிமீட்டர் உயரமாக இருப்பதோடு 1405 மில்லிமீட்டர் வீல் பேஸ் கொண்டுள்ளது. இத்தனை ம்சங்கள் நிறைந்த புதிய மாடல் 199 கிலோ எடை கொண்டுள்ளது. முன்பக்க டையர் 320 மில்லிமீட்டர் டூயல் டிஸ்க், பின்புறம் 220 மில்லிமீட்டர் சிங்கிள் டிஸ்க் மற்றும் ABS வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
மின்சாதன அம்சங்களை பொருத்த வரை பேங்கிங் சென்சிட்டிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், குவிக்ஷிஃப்டர், ஆண்டி-வைடு வீலி கண்ட்ரோல், யுனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம், லிஃப்ட் கண்ட்ரோல் சிஸ்டம், சிப் கண்ட்ரோல்டு திராட்டிள் மற்றும் பவர் டெலிவரி மோட் வழங்கப்பட்டுள்ளது.