கனடா, அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி

பொது நூலகம் ஒன்றில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
கனடா
கனடா
Published on

கனடா

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் யூத மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நேற்று மதியம் துப்பாக்கிச்சூடு நடந்தது.

ராணுவ உடையில் வந்த துப்பாக்கி ஏந்திய ஒருவர் அப்பகுதிக்கு வந்து அங்கிருந்த போலீசார் மீது சுடத் தொடங்கினார். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இதில் தாக்குதல் நடத்திய நபர் கொல்லப்பட்டார்.

அதே நேரம் மாண்ட்ரியல் காவல் துறையை சேர்ந்த முகமது லமின் பென்ரெடோன் (34) என்ற போலீஸ் அதிகாரி குண்டுடடிபட்டு உயிரிழந்தார். இவருடன் ஒரு பெண் அதிகாரியும் காயமுற்றார்.

சம்பவத்தின்போது அவ்வழியே வந்த யூத சமூக பாதசாரி ஒருவரும் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இடையில் சிக்கி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

தாக்குதல் நடத்திய நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை சோதித்தபோது அந்த நபர் பெண்கள் மற்றும் ஆபாச தளங்கள் மீது வெறுப்பு கொண்டு ஆபாச இணையமான பார்ன்ஹப் உடைய தாய் நிறுவனம் Aylo தலைமையகம் மீது தாக்குதல் நடத்தவே அப்பகுதிக்கு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சிகோ நகரில் உள்ள பொது நூலகம் ஒன்றில் நேற்று மாலை 5:00 மணியளவில் நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் நூலகத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவன் காயமடைந்தான்.

தகவலறிந்து விரைந்த போலீசார், பின்வாசல் வழியாக தப்ப முயன்ற குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

காயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com