உலகின் உயரமான பெண்ணை சந்தித்த உலகின் உயரம் குறைந்த பெண்

ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
உலகின் உயரமான பெண்ணை சந்தித்த உலகின் உயரம் குறைந்த பெண்
Published on

துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.

அவர்கள் இருவரும் சந்தித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com