

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்காவின் போர் விமானங்கள் தரையிரங்க, இம்மாத தொடக்கத்தில் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்ததாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மார்ச் 4 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் தரையிறங்க அனுமதி கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.
“பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படும் நிலையிலும், நாங்கள் எங்களின் நடுநிலைத்தன்மையை பேண விரும்புகிறோம். இந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மாட்டோம். மத்திய கிழக்கு போர் சவால்களை ஏற்படுத்துகிறது, ஆனால் நடுநிலையாக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் தேதியன்று, இந்தியாவிலிருந்து ஈரானுக்கு சென்ற ஐரிஸ் தேனாவை இலங்கை கடற்படை பகுதிக்கு அருகில் வைத்து அமெரிக்கா தாக்கியதில், 84 ஈரானியர்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அதன் மீட்பு பணிகளை இலங்கை அரசே மேற்கொண்டது.
மேலும் போரினால் இலங்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டினால் நான்கு நாட்கள் வேலைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு உதவ மறுத்துள்ளது.