7000 இலக்குகளுக்கு மேல் தாக்கினோம்.. ஈரானின் ராணுவ கட்டமைப்பை முழுமையாக சிதைத்துவிட்டோம் - டிரம்ப்

7000 இலக்குகளுக்கு மேல் தாக்கினோம்.. ஈரானின் ராணுவ கட்டமைப்பை முழுமையாக சிதைத்துவிட்டோம் - டிரம்ப்
Published on
Summary

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திறன் 90 சதவீதமும், டிரோன் தாக்குதல் திறன் 95 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

நேற்று டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் வான்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை சிதைத்துவிட்டது.

போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் உள்ள 7,000 க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் வணிக ரீதியான இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திறன் 90 சதவீதமும், டிரோன் தாக்குதல் திறன் 95 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இன்று கூட மூன்று ஆலைகளை நாங்கள் தாக்கியுள்ளோம்.

கடந்த ஒன்றரை வாரத்தில் மட்டும் ஈரானின் 100க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் 30 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுவில் உள்ள ராணுவ நிலைகளை அழித்தோம். ஆனால் எண்ணெய் குழாய்களை அப்படியே விட்டுள்ளோம். அவை அந்த நாட்டை எதிர்காலத்தில் மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.

ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பது உலக நாடுகளின் கூட்டுப் பொறுப்பு. மற்ற நாடுகளும் வந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com