நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றும் முயற்சியில் மரணித்த மனைவி - வெனிசுலா கால்பந்து வீரர் உருக்கமான பதிவு

இப்போது நீயும் நானும் மட்டும்தான், அம்மா சொர்க்கத்திலிருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார்.
நிலநடுக்கத்தில் மகளை காப்பாற்றும் முயற்சியில் மரணித்த மனைவி - வெனிசுலா கால்பந்து வீரர் உருக்கமான பதிவு
Published on

தென் அமெரிக்க தீவு நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை சில நொடிகள் இடைவெளியில் 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

தலைநகர் காரகஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக சேதங்கள் பதிவாகி உள்ளன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1430 ஆக உயர்ந்துள்ளது. 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலர் மாயமாகி உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. பலர் தங்கள் அனுபுக்குரியோரை இழந்து தவித்து வருகின்றனர்.

ஹெக்டர் பெல்லோ

தலைநகர் காரகஸில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் வெனிசுலா கால்பந்து நட்சத்திர வீரர் ஹெக்டர் பெல்லோ உடைய மனைவி ஆண்ட்ரியா உயிரிழந்தார்.

அதிர்ஷ்டவசமாக அவர்களது 20 மாத பெண் குழந்தை அலானாஇடிபாடுகளுக்குள் தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டாள். குழந்தை தற்போது காரகஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

தியாகம்

கட்டிடம் இடிந்துவிழும்போது மகள் அலானாவுக்கு அரண் போல செயல்பட்டு ஆண்ட்ரியா காப்பாற்றியுள்ளார். இந்த முயற்சியிலேயே ஆண்ட்ரியா உயிரிழந்துள்ளார்.

தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹெக்டர் பெல்லோ இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

மகள் அலானா தன் உயிரைக் காத்த தாய்க்கு நன்றி சொல்வது போல தொடங்கும் அந்த பதிவில், "அம்மா, நீ தான் என்றும் எனக்கு பிடித்தமான ஹீரோ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவிக்கு

தொடர்ந்து அந்த பதிவில் ஹெக்டர் பெல்லோ,

"நம் குழந்தைக்கு நீ எவ்வளவு அற்புதமான தாயாக இருந்தாய் என்றும், அவளுக்கு எவ்வளவு அன்பு கொடுத்தாய் என்றும் நான் அவளிடம் சொல்வேன்.

அவளைக் காப்பாற்ற நீ உன் உயிரை எப்படித் தியாகம் செய்தாய் என்ற கதையை நான் அவளிடம் சொல்வேன். இறுதிவரை தன் மகளைக் கைவிடாத ஒரு துணிச்சலான பெண் நீ" என்று எழுதியுள்ளார்.

மகளுக்கு

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை குறிப்பிட்டு எழுதிய பதவில்,

"மகளே, நீ வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலம் பொறுத்திரு. என் உடைந்த இதயத்தை உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

ஒரு மகிழ்ச்சியான தந்தையாக என்னை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் உன்னை இந்த உலகின் மிக மகிழ்ச்சியான குழந்தையாக வளர்ப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இப்போது நீயும் நானும் மட்டும்தான், அம்மா சொர்க்கத்திலிருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார்.

ஆண்ட்ரியா எனக்கு வலிமை தருவாள் என்று எனக்குத் தெரியும்.

தனது கடைசி நிமிடத்தில் அவள் என்னிடம் ஏதாவது சொல்ல விரும்பியிருந்தால், அது கண்டிப்பாக, அவள் செய்தது போலவே, நானும் என் உயிரைக் கொடுத்து உன்னை(அலனா) காப்பாற்ற சொல்லியிருப்பாள்'' என்று பெல்லோ குறிப்பிட்டுள்ளார்.

ஹெக்டர் பெல்லோ, வெனிசுலாவின் மார்டிமோ டி லா குயார் கிளப் கால்பந்து அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com