ஈரானில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஏரியாவு வயல் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் | South pars gas field

இந்த எரிவாயு வயல் ஈரானின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்கிறது.
தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்
தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்
Published on

ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயலையும், எண்ணெய் வசதிகளையும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.

புஷேர் மாகாணத்தின் துணை ஆளுநர் எஹ்சான் ஜஹானியனின் கூற்றுப்படி, இந்த ஏவுகணைத் தாக்குதல் தெற்கு பார்ஸ் சிறப்புப் பொருளாதார எரிசக்தி மண்டலத்தில் உள்ள ஒரு எரிவாயு ஆலையை நேரடியாகக் குறிவைத்தது.

ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர், கார்க் தீவில் உள்ள எண்ணெய் முனையம் குறிவைக்கப்பட்டது. ஆனால் அங்கு ராணுவ கட்டமைப்புகள் மட்டுமே தாக்கப்பட்ட நிலையில் தற்போதைய தாக்குதல் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நிகழ்ந்துள்ளது.

ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல், உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பாகும். இது சுமார் 9,700 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

இது ஈரானின் பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 2025 ஆம் ஆண்டில், இது ஒரு நாளைக்குச் சுமார் 730 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, நாட்டின் எரிசக்தித் தேவைகளின் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்தது.

இந்த எரிவாயு வயல் ஈரானின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்கிறது.

எனவே, இந்த வயல் மீதான தாக்குதல் ஈரானின் எரிசக்தி விநியோகம் மற்றும் வருவாயை நேரடியாக பாதிக்கக்கூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com