ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுங்க பிளீஸ்.. ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வேண்டுகோள்! | Strait of Hormuz

உலகின் ஐந்தில் இரு பகுதி, அதாவது சுமார் 20 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுங்க பிளீஸ்.. ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வேண்டுகோள்! | Strait of Hormuz
Published on

அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் 22 வது நாளை எட்டியுள்ளது. தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இச்சூழலில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 22 நாடுகள், அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்குமாறும் ஈரானிடம் வேண்டுகோள் விடுத்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் ஐந்தில் இரு பகுதி, அதாவது சுமார் 20 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த பாதையை மூடிய ஈரான், பின்னர் எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு இந்த வழியை திறக்க மாட்டோம் என தெரிவித்தது.

இதனால் எண்ணெய், எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தில் உலக நாடுகளும், வியாபாரம் செய்ய முடியாத கவலையும் அரபு நாடுகளும் மூழ்கியுள்ளன. இந்த சூழலில் 22 நாடுகள் இந்த அறிக்கையை விட்டுள்ளன.

முன்னதாக இன்று காலை, இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலை பிரிட்டன் கடுமையாகக் கண்டித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com