

அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் பேச்சுவார்த்தை இறுதி பெறாத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கடந்த மாதம் 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் இன்றுவரை நீடித்து வருகிறது. 4-வது வாரமாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் எரிபொருள், கியாஸ் தட்டுப்பாட்டால் திண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் வரும் வாரத்தில் ஈரான் மீதான தாக்குதல் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானிய பயங்கரவாத பிராந்தியம் மற்றும் அந்நாட்டின் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு தாக்குதல் இந்த வாரத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுக் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் (மத்திய கிழக்கு பிராந்தியம்) ஈரான் பயங்கர பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்திற்குள் போர் முடிவடைந்து விடும் என பல நாடுகள் எண்ணியிருந்த நிலையில், தற்போது 4-வது வாரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.