

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்த ஒரு நிறுவனம் மீதும் அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதிக்கும் என தெரிவித்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை எடுத்துச் சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் 8 கப்பல்களை முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதேபோல், கோடிகணக்கான மதிப்பு கொண்ட ஈரான் எண்ணெய் பீப்பாய்களை சேமித்து விற்பனை செய்த ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அணுசக்தி திட்ட விவகாரத்தில் ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, ஈரான்மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து இருக்கிறது.
தற்போது இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், இந்தப் புதிய மிரட்டலை அமெரிக்கா விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.