

ஈரானுடன் போரில் ஈடுபட்ட நிலையில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்தது. பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புத் துறையிலும் மந்தநிலை நீடிக்கிறது.
இருந்தபோதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வியக்கத்தக்க வகையில் 1 லட்சத்து 15 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவானது. போர்ச்சூழலால் ஏப்ரலில் 65 ஆயிரம் வேலைவாய்ப்புகளாக குறையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இது சிறப்பான அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
போரினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி விளைவுகள் இன்னும் அமெரிக்க வேலை சந்தையில் வெளிப்படவில்லை என்பதையே இது காட்டுவதாக ஊதிய செயலாக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.