டிரம்பின் சீன பயணம் நிறைவு.. விமானம் ஏறுவதற்கு முன் பரிசு பொருட்கள் உட்பட அனைத்தும் குப்பையில் வீசபட்டது ஏன்?

பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு வழங்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் உளவு பார்க்கும் கருவி கண்டறியப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் சீன பயணம் நிறைவு.. விமானம் ஏறுவதற்கு முன் பரிசு பொருட்கள் உட்பட அனைத்தும் குப்பையில் வீசபட்டது ஏன்?
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசித்து சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது அவருடன் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் சென்றிருந்தனர். இன்று சீன பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டார்.

இந்நிலையில் பீஜிங் விமான நிலையத்தில் தனது ஏர்போர்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர், சீன அரசு வழங்கிய நினைவுப் பரிசுகள், சிறப்புப் பிரதிநிதிகளுக்கான அடையாள அட்டைகள், விழாப் பாஸ்கள், மற்றும் தற்காலிகமாகப் பயன்படுத்த வழங்கப்பட்ட மொபைல் போன்கள் என அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

சீனாவின் உளவு பார்க்கும் தொழில்நுட்பங்கள் மீதான அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

சீனாவில் இருந்து பெறப்பட்ட எந்தவொரு பொருளும் ஏர்போர்ஸ் விமானத்திற்குள் அனுமதிக்கப்படாது என்ற கடுமையான விதிமுறையும் இதற்கு காரணம்.

சிறிய நினைவுப் பரிசுகள் அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகக் கூட அமெரிக்க அதிகாரிகளின் தரவுகள் திருடப்படலாம் அல்லது அவர்கள் கண்காணிக்கப்படலாம் என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு வழங்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் உளவு பார்க்கும் கருவி கண்டறியப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com