உக்ரைன் மீது ரஷியா வான் தாக்குதல் - 5 பேர் பலி.. பலர் படுகாயம்

எல்லைப் பகுதியான ரஷ்யாவின் பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார்
உக்ரைன் மீது ரஷியா வான் தாக்குதல் - 5 பேர் பலி.. பலர் படுகாயம்
Published on

உக்ரைனின் டினிப்ரோ நகர் மீது ரஷியா நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத் தலைவர் ஹன்சா தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

நேற்று மதியம் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.

தென்மேற்கு உக்ரைனின் ஒடெசா மாகாணத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். இங்குள்ள துறைமுகக் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

ரஷியா-உக்ரைன் எல்லைப் பகுதியான ரஷ்யாவின் பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com