Jet Crash | நடுவானில் மோதிக் கொண்ட ராணுவ விமானங்கள்... விமான கண்காட்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்

விபத்து குறித்து மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தின் 366வது ஃபைட்டர் விங் முகநூலில் தெரிவித்துள்ளது.
Jet Crash | நடுவானில் மோதிக் கொண்ட ராணுவ விமானங்கள்... விமான கண்காட்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்
Published on

ஞாயிற்றுக்கிழமை அன்று இடாஹோவிலுள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு ராணுவ விமானங்கள் மோதிக்கொண்டன.

இதைத் தொடர்ந்து, விமானங்கள் தரையில் விழுந்து வெடித்து சிதறின. விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிலையில், அவற்றின் விமானிகள் வெளியேறினர்.

“அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் விவரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் வெளியிடப்படும்,” என மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தின் 366வது ஃபைட்டர் விங் முகநூலில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் E/A-18G “வைக்கிங்ஸ்” கிரௌலர் குழுவின் இரண்டு விமானங்கள் ஈடுப்பட்டிருந்ததாக இடாஹோ ஸ்டேட்ஸ்மேன் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய நான்கு கடற்படை விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கன்ஃபைட்டர் ஸ்கைஸ் விமானக் கண்காட்சியின் அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com