Iran மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் வாய்ப்பு குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
trump
trump
Published on

ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா தனது முக்கிய இலக்குகளை அடையும் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். அதே சமயம், உடனடி போர்நிறுத்தத்திற்கு (ceasefire) ஒப்புக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் வாய்ப்பு குறித்து பரிசீலித்து வருவதாகவும் போரின் இலக்குகள் முழுமையாக நிறைவேறிய பிறகே ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விநியோக தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா சற்றே தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com