

அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா 200 போயிங் ஜெட் விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.
"அது ஒரு அறிக்கை போல இருந்தாலும், அது ஒரு உறுதிமொழி என்றே நான் கருதுகிறேன். அது ஏராளமான வேலைவாய்ப்புகள்," என்று அதிபர் ஜி ஜின்பிங் உடனான தனது உரையாடல் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் அதிபர் டிரம்ப் விவரித்தார்.
787 டிரீம்லைனர் மற்றும் 777 போன்ற 100 பெரிய ரக விமானங்களுக்கு கூடுதலாக, சுமார் 500 ஒற்றை வழித்தட போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும் சீனா ஆர்டர் செய்யக்கூடும் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் விவரித்திருந்தன.
சீன அதிகாரிகளிடம் இருந்து போயிங் நிறுவனம் பெற்ற கடைசி ஆர்டர், 2017-ஆம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தபோது வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்பிலான 300 விமானங்களுக்கான (ஒற்றை மற்றும் இரட்டை வழித்தடங்கள்) ஆர்டர் ஆகும்.