ஈரானில் இருந்து மில்லியன் பீப்பாய் எண்ணெய் எடுத்துள்ளோம் - ரகசியத்தை உடைத்த அதிபர் டிரம்ப்

இந்த நடவடிக்கை பற்றி பொதுமக்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதிபர் டிரம்ப்
அதிபர் டிரம்ப்
Published on

அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, மில்லியன் கணக்கான பீப்பாய் ஈரான் எண்ணெய் அந்நாட்டில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டதாகவும், அதன் மூலம் உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட இருந்த கடுமையான உயர்வு தடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானுடனான போர் முழுவதும், அமெரிக்கா ஒவ்வொரு இரவும் "மில்லியன் கணக்கான பீப்பாய்" எண்ணெயை புழக்கத்தில் இருந்து அகற்றி வருவதாக கூறினார். இந்த நடவடிக்கை பற்றி இன்னும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

"நாங்கள் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை எடுத்துள்ளோம். அது யாருக்கும் தெரியாது. நாங்கள் ஒவ்வொரு இரவும் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை எடுத்து வருகிறோம்," என்று டிரம்ப் கூறினார்.

ஈரானின் ரேடார் திறன்கள் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், கப்பல்கள் விளக்குகள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறி, அமெரிக்க படைகள் சமீபத்தில் 22 எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களை தாக்கியதாக டிரம்ப் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com