

ஈரான் - அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது.
மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கு அமைதி ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது.
இதற்கிடையே, 3 அமெரிக்கா கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன. ஈரானின் தாக்குதலையும் மீறி கப்பல்கள் கடந்ததில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடந்தி வருகின்றன. பதிலடி தாக்குதல் அமெரிக்காவும் நடத்தி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம், அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிலவுவது சாதாரண சண்டை, அன்பான ஒரு சண்டை எனவும் எங்கள் இருவரின் அமைதி ஒப்பந்தம் எப்போ வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்று வரைக்கும் போர் நீடிக்கிறது.
ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனை பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிருபரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கூறுகையில், ' இன்றிரவிற்குள்' ஈரானிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன், ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான பதில் 'விரைவில் தெரிந்துவிடும்' என்று கூறியுள்ளார்.