99% மக்கள் ஆதரவு.. இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம்!

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டிய டிரம்ப் , அவர் கூறுவதை எல்லாம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
99% மக்கள் ஆதரவு.. இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம்!
Published on

இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இஸ்ரேலுக்குச் செல்வது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த டிரம்ப், இஸ்ரேலில் தனக்கு 99 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்த இஸ்ரேலியப் பிரதமராகப் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் இதை வேடிக்கையாகவே தெரிவித்தார் என ஊகிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டிய டிரம்ப் , அவர் கூறுவதை எல்லாம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இஸ்ரேலில், ஆளும் கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் ஒரு பெரும் சவாலாக உள்ளது. எனவே, அங்கு நேதன்யாகுவுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.

இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போர் வெடித்தது.

ஈரான் போருக்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் சூழலில் டிரம்ப்பின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com