ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி
ஆப்கானிஸ்தான் அகதிகள்
Published on

ஊடுருவல்காரர்களை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பல ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும், வேலைப் பார்த்து வருபவர்களும் சொந்த நாடு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று லாரி மூலம் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். லக்மான் பிராந்தியத்தில் காபூல் நகருடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த 22 பேரில் 10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்குவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com