Iran War | ஈரான் போருக்குத் தேவையான நிதி ஏராளமாக உள்ளது - அமெரிக்க நிதியமைச்சர்

ஈரானுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதி அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
Iran War
Iran War
Published on

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஹார்முஸ் திறந்தே உள்ளது என்றும் எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு அதன் வழியே அனுமதி இல்லை என்றும் ஈரான் தெரிவித்தது.

இதனிடையே அமெரிக்க ராணுவ தலை​மையகம் (பெண்டகன்) ஈரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) நிதி தேவை என கோரிக்கை விடுத்​தது பேசுபொருளானது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதி அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.

பென்டகன் கோரியுள்ள ரூ.18 லட்சம் கோடி கூடுதல் நிதி குறித்துப் பேசிய அவர், இதற்காக அமெரிக்க மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், போர்ச் செலவுகளை அமெரிக்காவால் எளிதாகச் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com