பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் கால்பந்து வீரர் டிராவிஸ் கெல்ஸ் திருமணம்!

நியூயார்க்கில் ஆடம் சாண்ட்லர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
Taylow swift married
Published on

நியூயார்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் மற்றும் அமெரிக்கா கால்பந்து வீரர் டிராவிஸ் கெல்ஸ் திருமணம் நடந்தது.

இத்திருமணம் முடிந்ததும் அரங்கிற்கு வெளியே உள்ள திரைகளில் "JUST&T MARRIED" என்று ஒளிரப்பப்பட்டது. இத்திருமண விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஆடம் சாண்ட்லர் முன்னின்று நடத்தி வைத்தார். மேலும் மணமகளின் துணையாக டிராவிஸின் சகோதரர் ஜேசன் கெல்ஸும் மணமகனின் துணையாக டெய்லர் ஸ்விப்ட்டின் சகோதரர் ஆஸ்டின் ஸ்விப்ட்டும் திருமணவிழாவில் முன்னிலை பெற்றிருந்தனர்.

மேலும் இத்திருமண விழாவிற்கு சுமார் 1000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக ஹக் கிராண்ட் மற்றும் அவரது மனைவி அன்னா எலிசபெத் எபர்ஸ்டீன், ஈதன் ஹாக், ஜேசன் சுடேகிஸ், பென்சன் பூன், எட் ஷீரன், செலினா கோமஸ், ஜிகி ஹாதிட், பிராட்லி கூப்பர் மற்றும் ஹக் கிராண்ட் போன்ற பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

அரங்கத்தின் வெளியே ரசிகர்கள் ஸ்விப்ட் பாடல்களை பாடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திருமணத்திற்கு முன்னதாக இன்போசிஸ் தியேட்டரில் ஒரு சிறிய இரவு விருந்து நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த இரவு விருந்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

ஸ்விப்ட் மற்றும் டிராவிஸ் ஜோடி 2023 முதல் காதலித்து வந்தனர். ஆகஸ்ட் 26, 2025 அன்று நிச்சியதார்த்தம் நடைபெற்றது.

பொதுவாக அரச குடும்பத்தினர் மட்டுமே மேடிசன் ஸ்கொயர் கார்டனில் திருமணத்தை நடத்துவர். இந்நிலையில் மேடிசனில் நடைபெற்ற இவ்விருவரின் திருமண கொண்டாட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது,

இத்திருமணத்தை "நூற்றாண்டு திருமணம்" என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். திருமணத்திற்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது வரை இந்த ஜோடி தங்களது திருமண விழாவின் புகைப்படங்களை வெளியே பகிரவில்லை. ரசிகர்கள் அவர்களின் திருமணப் புகைப்படங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com