துருக்கி: பள்ளிக்கூடத்தில் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன்

பள்ளிக்கூடத்தில் உள்ள இரண்டு வகுப்பறைகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆசிரியர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி: பள்ளிக்கூடத்தில் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன்
Published on

துருக்கியில் பள்ளிக்கூடத்தின் இரண்டு வகுப்பறையில் மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டான். போலீஸ் அதிகாரியான அவரனது தந்தையின் துப்பாக்கியால் இந்த கொடூர சம்பவத்தை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காரணம் உடனடியாக தெரியவில்லை. துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com