2-ஆம் உலகப் போர் வெற்றி தினம்.. இன்று இரவு முதல் உக்ரைன் - ரஷியா போர் தற்காலிக நிறுத்தம்

கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
2-ஆம் உலகப் போர் வெற்றி தினம்.. இன்று இரவு முதல் உக்ரைன் - ரஷியா போர் தற்காலிக நிறுத்தம்
Published on

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது.

இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு உக்ரைனுடனான போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் தொடங்கும்.

இருப்பினும், கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவர உண்மையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிரெம்ளினை உக்ரைன் கிபிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்

இதற்கிடையே ரஷியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடான லாட்வியா வான்வெளிக்குள் நேற்று ஒரே இரவில் பல டிரோன்கள் ஊடுருவியதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஊடுருவிய டிரோன்களில் இரண்டு கீழே விழுந்து நொறுங்கின. இதில் ஒன்று கிழக்கு லாட்வியாவில் உள்ள ரெசெக்னே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீது விழுந்து சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com