உக்ரைன் அருங்காட்சியகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அரிய ஓவியங்களை கொள்ளையடித்த ரஷியா!

உக்ரைன் படைகள் கெர்சன் நகரை மீட்டபோது, அங்கிருந்த அருங்காட்சியகத்தின் இயக்குநர் அலினா டோட்சென்கோ கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது.
உக்ரைன் அருங்காட்சியகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அரிய ஓவியங்களை கொள்ளையடித்த ரஷியா!
Published on

உக்ரைன் மீதான போரில் ரஷியா அந்நாட்டின் அரிய கலைப் பொருட்களையும் கொள்ளையடித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன.

உக்ரைன் படைகள் கெர்சன் நகரை மீட்டபோது, அங்கிருந்த அருங்காட்சியகத்தின் இயக்குநர் அலினா டோட்சென்கோ கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது.

அதிர்ஷ்டவசமாக, அலினா போருக்கு முன்பே ஒவ்வொரு கலைப் பொருளையும் புகைப்படம் எடுத்து டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்திருந்தார். இந்தத் தரவுகள் தற்போது இழந்த பொருட்களை மீட்க முக்கிய ஆதாரமாக உள்ளன.

உக்ரைன் கலாச்சார அமைச்சகத்தின்படி, இதுவரை 1,707 கலாச்சார பாரம்பரிய இடங்கள் மற்றும் 2,503 கலைக் கூடங்கள் ரஷியாவால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 35,000 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com