கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: 13 இந்திய, பாகிஸ்தான் தொழிலாளர்கள் பலி; 66 பேர் காயம்!

காலை விபத்தில் சிக்கி 18 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: 13 இந்திய, பாகிஸ்தான் தொழிலாளர்கள் பலி; 66 பேர் காயம்!
Published on

கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில், பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 66 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரானின் தாக்குதல்களால் ஆலை சேதமடைந்து மூடப்பட்டிருந்த நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து நேற்று ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தவேளையில், தொழில்நுட்ப கோளாறு திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

காலை 18 பேர் மாயமானதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 13 பேர் உயிரிழந்துள்ளதை கத்தாரின் எரிசக்தி அமைச்சரும், கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான சாத் அல்-காபி உறுதிப்படுத்தியுள்ளார்.

“என் வாழ்வில் ஒருபோதும் நடக்கவே கூடாது என்று நான் எப்போதும் விரும்பிய ஒரு விஷயத்தை இன்று செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை கொண்ட நம்முடைய மக்களின் 13 விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துவிட்டோம் என்ற துயரமான செய்தியை அறிவிப்பதுதான்.

மேலும், 66 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.” என்று விபத்து குறித்து அல்-காபி கூறினார்.

மேலும் பேசிய அவர், இது ஒரு விபத்து, சதியோ, பகையால் செய்த வேலை அல்ல. அவசரப் பராமரிப்புத் தேவைகள் காரணமாக, கடந்த 2025 டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது; இரண்டு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டது. என தெரிவித்தார்.

தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தவதாக தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com