

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸில் உள்ள கட்டிடங்களை குலுங்கியது. அந்நாட்டின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் (Moron) பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
கராகஸில் நிலநடுக்கத்தால் ஆடிய கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.