

வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பெரிய சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இதன் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோமீட்டராக இருந்தது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK ஒளிபரப்பிய காணொளியில், ஹச்சினோஹே நகரில் போக்குவரத்து விளக்குகள் வழக்கம் போல் இயங்க, இயல்பான போக்குவரத்து காணப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.