ஜி7 உச்சிமாநாட்டை முடித்துக் கொண்டு பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜி7 உச்சிமாநாட்டை முடித்துக் கொண்டு பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
Published on

ஜி7 உச்சி மாநாட்டில் நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கம் சார்ந்த முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் கருத்துக்களை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற பல "பயனுள்ள" சந்திப்புகளுக்கு பிறகு பாரிஸ் சென்றடைந்தார். பாரிஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சற்று நேரத்திற்கு முன்பு பாரிஸ் சென்றடைந்தேன். அங்கு இந்திய வம்சாவளியினர் எனக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவையும் பிரான்சையும் நெருக்கமாக்குவதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். நமது புவியின் முன்னேற்றத்திற்கு இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை இன்றியமையாதது," என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விருந்தினர் நாடாக இந்தியா அழைக்கப்பட்டிருந்த ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் இருந்தார். "எவியனில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் பயனுள்ள சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கம் சார்ந்த முக்கிய துறைகளில் இந்தியாவின் கருத்துக்களையும் முயற்சிகளையும் முன்வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

உலகளாவிய வளர்ச்சியை பொறுத்தவரை, 'குளோபல் சவுத்' நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது, ​​எனது பிரான்ஸ் பயணத்தின் இறுதிக்கட்டமாக பாரிஸ் செல்கிறேன். பாரிஸில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 'விவாடெக் 2026' நிகழ்வில் உரையாற்றுவதும், அங்குள்ள இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் பங்கேற்பதும் அடங்கும்," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com