காசாவில் பாலஸ்தீன கால்பந்து வீரரை சுட்டுக் கொலை செய்த இஸ்ரேல்

1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகளப் பயிற்சியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
சலீம் அல் அஷ்கர்
சலீம் அல் அஷ்கர்
Published on

பாலஸ்தீன கால்பந்து அணியின் இளம் கோல்கீப்பரான சலீம் அல் அஷ்கர் (32), காசாவில் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் வடகிழக்கே அமைந்துள்ள அல்கராலா என்ற நகரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின் போது சலீம் அல் அஷ்கர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

திருமணம்

இளம் வயதிலேயே திறமையான கோல்கீப்பராக முத்திரை பதித்த சலீம் அல் அஷ்கருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

1,000க்கும் மேற்பட்ட வீரர்கள்

சலீம் அல் அஷ்கரின் மரணத்தை அடுத்து, பாலஸ்தீன கால்பந்து சங்கம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய படைகளின் தொடர் தாக்குதல்களால் 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகளப் பயிற்சியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சலீம் அல்அஷ்கரின் திடீர் மறைவால் வாடும் அவரது மனைவி, பெற்றோருக்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com