ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய அமெரிக்க Lobby.. பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு

மோதலை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 80க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார்
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய அமெரிக்க Lobby.. பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு
Published on

கடந்தாண்டு ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது மே 7 அன்று ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையைத் மேற்கொண்டது.

இதன் பின் இரு நாடுகள் இடையே நடந்த மோதல் மே 9 அமைதி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு ஏஜெண்டுகள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் அமெரிக்கா சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அதில், ஆபரேஷன் சிந்துார் காலகட்டத்தில், தன்னை தற்காத்து கொள்ளவும் மோதலை நிறுத்தவும் அமெரிக்க தலையீட்டை கோரி வாஷிங்டனில் பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் Lobby மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்திற்காக வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பணம் பெற்றுக்கொண்டு மேற்கொண்ட இந்த லாபி பணிகள் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பு விவாதித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் நிதி கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதைக் கண்காணிக்கும் FATF மற்றும் அமெரிக்கக் கருவூலத் துறை அதிகாரிகளுடனும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மோதலை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 80க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்ட நிலையில் வாஷிங்டனில் திரைமறைவில் நடந்த பாகிஸ்தானின் நகர்வுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பாகிஸ்தானும் டிரம்ப் கூற்றை ஆமோதித்துள்ளது. ஆமோதித்து வருகிறது. ஆனால் இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுத்து வருகிறது.

அண்மையில் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com