

பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் நடந்த IED வெடிகுண்டு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். நால்வர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா நகரில் குல்சான் பிளாசா அருகில் உள்ள பரபரப்பான சந்தையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அஹ்மத்சாய் என்ற பழங்குடியினத்தின் தலைவர் மாலிக் தாரிக் உடைய வாகனம் சந்தைப் பகுதியை கடக்கும்போது குண்டு வெடித்துள்ளது. இதில் அவர் தப்பித்தபோதும் சந்தையில் இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புப்படை, காயமடடைந்த நல்லவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
தாக்குதலை தொடர்ந்து சந்தையில் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
பரபரப்பான சந்தைப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.