

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அவரை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வரவேற்று உபசரித்தார்.
அசிம் முனீர் அதிகாரிகள் அடங்கிய குழு சென்றுள்ளது.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு 21 மணி நேரம் ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது, ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை தளர்த்துவது உள்ளிட்டவற்றில் முரண்பாடுகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததால் பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையே ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார், அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் அதற்கு இசைந்தால் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படும் என ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்தை மையமாக வைத்துத் தொடங்கும் என்று 'நியூயார்க் போஸ்ட்' இதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் குழு ஈரான் சென்றுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்தப் பயணம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்க்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல், லெபனான் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடந்து வருகிறது. இருந்தபோதும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.