பாதுகாப்பு படை தலைமையகத்தில் தாக்குதல்- 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான்

பாதுகாப்புப் படையினருக்கும் பயங்ரவாத கும்பலுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.
Pakisthan
தற்கொலைப்படை தாக்குதல்
Published on

பாகிஸ்தானின் கராச்சி நகரில் குலிஸ்தான் இ ஜவ்ஹர் என்ற பகுதியில் அமைந்துள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

குண்டுவெடிப்பு:

நேற்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முதன்மை நுழைவாயில் அருகே வந்த பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்தான்.

இந்த முதல் குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததுடன், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிறிய குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்தன.

தாக்குதல்:

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பயங்கரவாதிகள் படையினரை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

பயங்கிரவாதிகள் தரப்பில் ஆறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் ஒருவனை உயிருடன் பிடித்தனர்.

ஜமாத் உல் அஹ்ரார்:

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடந்த குலிஸ்தான் இ ஜவ்ஹர் சாலையானது கராச்சியின் முக்கியப் பல்கலைக்கழகங்களையும், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தையும் இணைக்கும் முதன்மைச் சாலையாகும்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி சாலையை முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சிந்து முதலமைச்சர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com