ஒன்றல்ல., பல., பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அவசர ஆலோசனை நடத்தும் தென்கொரியா

கொரிய தீபகற்ப கடற்பகுதியில் இன்று காலை வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஒன்றல்ல., பல., பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அவசர ஆலோசனை நடத்தும் தென்கொரியா
Published on

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா உடன் இணைந்து அமெரிக்கா தங்களுடைய பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நினைக்கிறார். இதனால் அணு ஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை அதிகரிக்கும் பணிகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருகிறது.

இதனால் அடிக்கடி ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது. ஜப்பான் நோக்கி கடற்கரை பகுதியில் அடிக்கடி சோதனை நடத்தி பதற்றத்தை தூண்டும். அதேபோல் கொரிய தீபகற்ப கடற்பகுதியில் ஏவுகணைகள் செலுத்தி சோதனை நடத்தும். இதனால் வடகொரியா செயல்களை தென்கொரியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியாவின் வடக்கில் உள்ள சின்போ-வின் தெற்கு பகுதியில் இருந்து கடல் பகுதிகளை நோக்கி வடகொரியா ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனால் அவசர ஆலோசனை நடத்த தென்கொரியா திட்டமிட்டு்ளளது.

கடந்த வாரம் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்குப் பிறகு "தனது அரசாங்கம் அணுசக்திப் படைகளின் எல்லையற்ற விரிவாக்கத்தின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வருருகிறது. நாட்டின் அணுசக்தித் தாக்குதல் மற்றும் விரைவுப் பதிலடித் திறன்களைக் கூர்மைப்படுத்தும் வகையில் சோதனை நடத்தப்பட்டது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com