துருக்கி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கைகலப்பு! ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

மந்திரி சபையில் மறுசீரமைப்பை மேற்கொண்டார் அதிபர் எர்டோகன்.ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.
துருக்கி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கைகலப்பு! ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!
Published on

துருக்கியின் மந்திரி சபையில் மறுசீரமைப்பை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். இதில் அரசாங்க தலைமை வக்கீல் அகின் குர்லெக்கை புதிய நீதி மந்திரியாக நியமித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் பாராளுமன்றத்தில் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர். மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com