'இந்தியாவில் சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு குறைவு..' நெதர்லாந்து பிரதமர் கருத்துக்கு இந்தியா பதில்

அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்.
'இந்தியாவில் சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு குறைவு..' நெதர்லாந்து பிரதமர் கருத்துக்கு இந்தியா பதில்
Published on

பிரதமர் மோடி 5 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோடி, அமீரக பயணத்தை முடித்து நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறித்து அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன், பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், "இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பெரியளவில் இல்லை. அதுபோல, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளும் அழுத்தத்தில் உள்ளன.

இவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள். பிற சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர்" என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடி நெதர்லாந்து சென்று அவரை சந்தித்தபோது இந்த கருத்துக்கள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை. நெதர்லாந்து பயணத்தை முடித்து மோடி ஸ்வீடனுக்கு சென்றுவிட்டார்.

இதன்பின் ராப் ஜெட்டன் கருத்துக்கு இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ் ராப்பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "நமது நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக அமைப்பு குறித்த அடிப்படைப் புரிதல் மற்றும் போதுமான தகவல்கள் இல்லாததாலேயே இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

140 கோடி மக்கள்தொகையையும், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும் கொண்ட, பெரும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு இந்தியா. இந்து மதம், பௌத்தம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதம் ஆகியவை இங்குதான் பிறந்தன.

அனைத்து மதங்களும் பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்து வருகின்றன. சமீபத்திய தேர்தல்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பங்கேற்பு, இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கு ஒரு சான்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.

2026 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 157வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா "மிகவும் மோசம்' என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com