நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 20 பக்தர்கள் உயிரிழப்பு

மலைப்பகுதி வழியாக அந்த ஜீப் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 20 பக்தர்கள் உயிரிழப்பு
Published on

நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3 ஆயிரம் அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) அங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள இந்த கோவிலுக்கு படையெடுத்து திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று மாலை அந்த மடாலயத்துக்கு செல்வதற்காக பக்தர்கள் ஜீப்பில் ஏறி சென்றனர். மலைப்பகுதி வழியாக அந்த ஜீப் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் மலைப்பாதையில் இருந்து விலகி 700 மீட்டர் ஆழ முள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் பயணித்த 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com