லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - மருத்துவ பணியாளர்கள் உட்பட 10 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்புகள் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டன.
லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - மருத்துவ பணியாளர்கள் உட்பட 10 பேர் பலி
Published on

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று, தெற்கு லெபனானின் அல் நஹ்ர் கிராமத்தில், காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது இஸ்ரேலிய டிரோன் தாக்குதில் 2 மருத்துவ ஊழியர்களும், ஒரு சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேபோல தெற்கு லெபனானின் ஹன்னூமியாவில் இஸ்லாமிய சுகாதாரக் குழுவைச் சேர்ந்த நான்கு மீட்புப் பணியாளர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர்.

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில், சிரிய எல்லைக்கு மிக அருகில் உள்ள பிரிட்டல் நகரின் புறநகர்ப் பகுதியான நபி ஸ்ரீஜ் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

தெற்கின் முக்கிய துறைமுக நகரான டைர் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டு, அந்த நகரமே புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com