

இஸ்ரேல் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தெற்கு லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது.
தரைவழி தாக்குதல் மூலம் பியூபோர்ட் கோட்டையையும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி, இந்த 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையும் அதன் மலைப்பகுதியும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய முக்கியத்துவம் இடமாகும்.
இங்கிருந்து பார்த்தால் தெற்கு லெபனான் மற்றும் இஸ்ரேலின் வடமத்திய பகுதிகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
இந்த உயரமான இடத்தைப் பயன்படுத்திதான் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தாக்கியதாக இஸ்ரேல் வாதிடுகிறது.
முன்னதாக நேற்று வடமத்திய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இந்த கோட்டையைக் கைப்பற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
கைப்பற்றப்பட்ட பியூபோர்ட் கோட்டையின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தங்களது நாட்டு தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர்.
பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியிருப்பது, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் இஸ்ரேல் படைகள் தங்களின் கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் என்று நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.