

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. ஈரான் அருகில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தியது. அங்குள்ள விமான நிலையம், புர்ஜ் கலிபா, ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இருந்தபோதிலும் சிறந்த வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரானின் டிரோன்கள் மற்றும் ஏவகணைகளை இடைமறித்து அழித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எங்களுடைய வீரர்கள் உதவி புரிந்தனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் அயர்ன் டோம் பேட்டரிகளை வழங்கியது. அதை இயக்கவதற்கான வீரர்களையும் அனுப்பியது என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மைக் ஹக்கபீ கூறியதாவது:-
ஆபிரகாம் ஒப்பந்தத்தின் முதல் உறுப்பினரான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதன்மூலம் அதன் நன்மைகளை மட்டும் பாருங்கள். ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது இஸ்ரேல் உடல் பல்வேறு நாடுகள் வெளியறவு கொள்கை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா மூலம் போடப்பட்ட ஒப்பந்தமாகும்.
ஈரானுக்கு எதிரான போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும், அவற்றை இயக்குவதற்கான வீரர்களையும் அனுப்பி வைத்தது.
இவ்வாறு மைக் ஹக்கபீ தெரிவித்தார்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக பதில் ஏதும் கூறவில்லை.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு அமீரகம், 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலை இராஜதந்திர ரீதியாக (diplomatically) அங்கீகரித்தது. இதனால் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டது.
ஈரான் மீது நீண்டகாலமாக சந்தேகம் கொண்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம்- இஸ்ரேல் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.