ஈரானின் அடுத்த உச்ச தலைவர் ஆகும் காமேனியின் மகன் மொஜ்தபா?

அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். காமெனியின் 2-வது மகனான மொஜ்தபா காமேனி.
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் ஆகும் காமேனியின் மகன் மொஜ்தபா?
Published on

நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டதை அடுத்து தலைமை மதகுரு பதவியான ஈரானின் அடுத்த உச்ச தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரானின் அரசியலமைப்பின்படி, 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

இந்த அமைப்பிற்கான வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சிலால் சரிபார்க்கப்படுகிறார்கள். அதன் உறுப்பினர்கள் உச்சத் தலைவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நியமிக்கப்படுகிறார்கள்.

தற்போது அயதுல்லா அலி காமேனியின் 2-வது மகனான மொஜ்தபா காமேனி (வயது 56) உச்ச தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஈரான் புரட்சிகர காவல்படை மற்றும்துணை ராணுவப் படையுடன் வலுவான தொடர்புகளை கொண்டுள்ளவர்.

அதேபோல் மூத்த அரசியல்வாதியும்,புரட்சிகர காவல்ப டையின் முன்னாள் தளபதியுமான அலி லாரிஜானியும் உச்ச தலைவர் போட்டியில் உள்ளார்.

தற்போது இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்செயலாளராக உள்ளார். மேலும் அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com