

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
‘அமெரிக்க-சியோனிசத் தரப்பினரால் விடியற்காலையில் நடத்தப்பட்ட குற்றவியல், கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்தார்’ என ஈரான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நேற்று ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அறிவித்த நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், ஈரானியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜாரி, பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
உச்ச தலைவர் அலி கமேனியின் படுகொலையுடன் தொடங்கிய மூன்று வார கால போரில், ஈரானிய தலைமைத்துவத்தின் முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.