‘ஈரான் கடற்படை தளபதி கொல்லப்பட்டார்’ - இஸ்ரேல்

ஈரானின் கடற்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் கடற்படை தளபதி கொலை?  - இஸ்ரேல் அறிவிப்பு
Published on

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அபாஸ் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பில் இவர் ஈடுப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஈரானோ, இஸ்ரேலிய ராணுவமோ இந்த தகவலை தற்போதுவரை உறுதி செய்யவில்லை.

ஒருவேளை இந்தக் கொலை உறுதிசெய்யப்பட்டால், அது ஈரானின் ராணுவத் தலைமைக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

தெற்கு ஈரானின் புஷெர் மாகாணத்தில் பிறந்த அலிரேசா தங்சிரி, ஈரான்-ஈராக் போர் மற்றும் அமெரிக்காவுடனான ஈரானின் முதல் மோதலான 'டேங்கர் போர்' ஆகியவற்றில் பணியாற்றிய பிறகு, IRGC கடற்படையில் இணைந்தார்.

2010 முதல் 2018 வரை துணைத் தளபதியாகப் பணியாற்றிய பிறகு, தலைவராக பொறுப்பேற்றார்.

ஏற்கனவே ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, துணை ராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி மற்றும் பசிஜ் மடையின் பல உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com