ஈரான் உளவுத்துறை அமைச்சர் கொலை - இஸ்ரேல் அறிவிப்பு | Esmaeil Khatib

எஸ்மாயில் கதீப், அயதுல்லா காமேனியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்று அறியப்படுகிறார்.
எஸ்மாயில் கதீப்
எஸ்மாயில் கதீப்
Published on

ஈரானிய உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் எஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் ஈரான் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து கொல்ல இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு பிரதமர் நெதன்யாகு முழு சுதந்திரம் அளித்துள்ளார். முக்கிய ஈரானிய தலைவர்களுக்கான வேட்டை தொடரும் என்று காட்ஸ் கூறினார்.

எஸ்மாயில் கதீப்பின் மரணத்தை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பிப்ரவரி 28, போர் தொடங்கிய நாளன்று, ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.

அயதுல்லா காமேனியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான அலி லாரிஜானியும் அண்மையில் கொல்லப்பட்டார். இவர் ஈரான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அவரின் மரணத்துக்கு பழிவாங்குவோம் என ஈரான் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் கதீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எஸ்மாயில் கதீப், அயதுல்லா காமேனியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்று அறியப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com