Iran War | புதிய வியூகங்களை காட்டுவோம்... அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Iran War | புதிய வியூகங்களை காட்டுவோம்... அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
Published on

அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்தது. கடந்த சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில், இரண்டு வார கால போர் நிறுத்தம் முடியும் முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மீண்டும் போர் மூண்டால், தெஹ்ரானிடம் "புதிய வியூகங்கள்" உள்ளன என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

"அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம், மேலும் கடந்த இரண்டு வாரங்களாக போர்க்களத்தில் புதிய வியூகங்களை காட்ட நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான காலிபாஃப், எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com