மீண்டும் ஏழரையை இழுத்த இஸ்ரேல்.. லெபனான் மீது தாக்குதல் - அமெரிக்காவுடன் பேசி இனி அர்த்தம் இல்லை என ஈரான் அதிருப்தி

ஈரானுடன் இன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும், உடனே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் நேற்றே அறிவித்தது நடக்கவில்லை.
இன்று பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
இன்று பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
Published on

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்திட தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார்.

ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அதிலுள்ள சில அம்சங்களுக்கு தங்கள் தலைமையிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை என கூறி வருகிறது.

இதனிடையே நிலைமையை மோசமாகும் விதமாக இஸ்ரேல், லெபனான் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனானை தாக்கினால் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டோம் என ஈரான் முன்னரே எச்சரித்திருந்தது.

பெய்ரூட் தாக்குதல்

இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியே நகர் மீதான இஸ்ரேலின் இன்றைய தாக்குதலை சுட்டிக்காட்டி அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

தாஹியா மீதான தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

அர்த்தம் இல்லை

இந்நிலையில் ஈரானின் பேச்சுவார்த்தை குழு பிரதிநிதி முகமது பாகர் காலிபாப், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது, இனி அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் திட்டம்?

முன்னதாக ஈரானுடன் இன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும், உடனே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் நேற்றே அறிவித்த நிலையில் அது நடக்காமல் போனது.

இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதல் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு அமைதி திரும்ப கூடாது என்ற இஸ்ரேலின் திட்டமாக இருக்கலாம் என பலர் கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com